யாழ்ப்பாணத்தில் வர்த்தக செயற்பாட்டை ஆரம்பித்துள்ள சீன நிறுவனம்

Share

கடந்த சில காலமாக சீனாவின் செயற்பாடுகள் தெற்கை நோக்கியதாக இருந்த நிலையில் தற்போது வடக்கிலும் தனது செயற்பாட்டை மெல்ல ஆரம்பித்துள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சைனோபெக் நிறுவனம்  பெற்றோல் விநியோகத்தை ஆரம்பித்த நிலையில் இன்று செவ்வாய்கிழமை (24) மானிப்பாய் மெமோறியல் வீதியில் சைனோபெக்  ஒயில் வகைகளை அறிமுகம் செய்து  விநியோக முகவரை அறிமுகப்படுத்தியுள்ளது.

குறிப்பாக சைனோபெக் ஒயில் நிறுவனத்தின் இலங்கையின் ஏக விநியோகஸ்தரான இன்டர்நஷனல் லுப்ரிக்கட் பிறைவட்லிமிட்டட் நிறுவனமானது யாழ்ப்பாணத்திற்கான தனது யாழ். விநியோகஸ்தராக கோல்ட் மவுன்ட் பிறதர்ஸ் பிறைவட் லிமிட்டட் என்னும் நிறுவனத்தினை மானிப்பாயில் ஆரம்பித்துள்ளது.

இந்நிகழ்வில் பங்குதாரர்களான பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜயசாந்த தொட்டஹேவகே, தேசிய விற்பனை முகாமையாளராக துசிதகுமார, விற்பனை முகாமையாளர் எம்.குகன் விருந்தினர்களாக கலந்து கொண்டதுடன்  சைனோபெக் எரிபொருள் விற்பனை முகாமையாளர்கள் வாகன திருத்துநர்கள் வாகன உதிரிப்பாக விற்பனையாளர்கள் பொது மக்கள் ஆகியோர்  கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு