இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவள கொள்ளையை தடுக்கவில்லை என்றால் எனது தலைமையில் போராட்டம் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.
சிவகாசியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,
“விருதுநகர் மாவட்டம் வறட்சியான பகுதியாகும். வேளாண்மை சார்ந்த தொழில்கள் இங்கு இல்லை. தாமிரபரணி மற்றும் காவிரி ஆற்றின் உபரி நீரை குன்டாற்றில் இணைக்கின்ற திட்டத்தை இந்திய தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் வெடி விபத்துகளுக்கு அதிகாரிகள் கையூட்டு பெற்றுக்கொண்டு சரியான முறையில் ஆய்வு நடத்தாததே காரணம். பட்டாசு தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்குவதை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும்.
பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
இலங்கையின் இந்திய கடல் எல்லையில் கடல் கொள்ளையர்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. இலங்கை அரசின் தூண்டுதலின் பேரில் கடல் கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கி வருகிறார்கள்.
இலங்கை அரசு மறைமுகமாக கடல் கொள்ளையர்களை உருவாக்கி உள்ளது.
கடல் கொள்ளையர்களுக்கு இலங்கை அரசு அனைத்து உதவியும் வழங்கி வருகிறது. தமிழக அரசும், இந்திய மத்திய அரசும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பசுமையான கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது. ஆளும் கட்சியை சேர்ந்த பெரும் புள்ளிகள் கனிமள கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன.
தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து அதற்குரிய விசாரணை நடத்ததவில்லை என்றால் எனது தலைமையில் பாமக சார்பாக போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என முதல்வர் சொல்வது தவறான கருத்து. பீகார், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சமூக நீதி பேசும் திமுக தலைமையிலான தமிழக அரசு ஏன் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தயக்கம் காட்ட வேண்டும்? நிதி ஒதுக்கீடு செய்து ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
ஜாதி வாரிய கணக்கெடுப்பு இந்திய மத்திய அரசு செய்ய வேண்டும் என தமிழக அரசு தட்டிக்ககழிக்க கூடாது. திமுக தேர்தலுக்கு முன்பு நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சி செய்வோம் என கூறி இருக்கலாம், ரத்து செய்வோம் என உறுதி அளித்திருக்க கூடாது.
நீட் தேர்வை ரத்து செய்யும் மன நிலையில் இந்திய மத்திய அரசு இல்லை. பாராளுமன்ற தேர்தலின் பாமக நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும். தமிழக ஆளுனரும், தமிழக அரசும் எதிரும் புதிருமாக செயல்பட கூடாது. அரசு செய்யும் தவறுகளை எடுத்து சொல்ல ஆளுனருக்கு உரிமை உள்ளது. வேண்டுமென்றே அரசை எதிர்க்க கூடாது” என தெரிவித்தார்.