அதிகரிக்கும் கட்டணங்களால் நாட்டில் மக்கள் வாழ முடியாத நிலை

Share

மக்கள் இந்த மண்ணில் வாழ முடியாத சூழலை அரசாங்கம் உருவாக்கி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தருமபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வைர விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்பொழுது அரசாங்கம் IMF இன் இரண்டாம் கட்ட நிதியினை பெறுவதற்காக நாட்டுமக்களுக்கு பெரும் சுமையை கொடுத்துவருகிறது.

இதனால் IMF இரண்டாம் கட்ட கொடுப்பனவை பெறுவதற்கு மின்சார கட்டணம் மற்றும் எரிபொருள் சமையல் எரிவாயு என்பனவற்றின் விலைகளை தாம் நினைத்தவாறு அதிகரித்து வருகிறது.

தற்பொழுது இந்த நாட்டில் அரச ஊழியர்களின் சம்பளமோ அல்லது தனியார் ஒருவரின் நாளாந்த சம்பவமோ அதிகரிக்கப்படவில்லை.

வெறுமனே அரசாங்கம் தான் நினைத்தவாறு பொருட்களின் விலைகளை அதிகரித்து வருகிறது இதன் காரணமாக இந்த நாட்டில் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு