படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 23 ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்றது.
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் ஊடகவியலாளர்கள் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் , சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்ட ம.நிமலராஜன் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி, மலர்மாலை அணிவித்து உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
மயில்வாகனம் நிமலராஜன் யாழ்ப்பாணத்தை தளமாக்க கொண்டு இயங்கிய முன்னணி ஊடகவியலாளர் ஆவார். 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 19 அன்று இவர் இலங்கை இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இராணுவ ஆதரவோடு இயங்கும் ஒட்டுக்குழு ஆயுததாரி ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 23 வருடங்கள் கடக்கின்ற போதிலும் இவரின் படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.