மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்தில் புதிய புத்தர் சிலை !

Share

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை  (15)மட்டக்களப்பு  அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத யஹம்பத்தின் பங்களிப்புடன் புதிய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

 

மாதவனை மயிலத்தமடு பிரதேசம் பாரம்பரியமாக தமிழ் பால் பண்ணையாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அப்பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள சிங்கள குடியேற்றவாசிகளுக்கு ஆதரவாக புதிய புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

அதேவேளை தமிழர் பகுதிகளில் தொடர்ந்து காணி அபகரிப்பிலும், குடிசார் பரம்பலை மாற்றியக்கவும், பௌத்த மயமாக்கலை தொடர்ச்சியாகவுமே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு