ஹமாஸ் இயக்கத்தின் திடீர் தாக்குதலைத் தொடர்ந்து காசா மீது 5 நாட்களாக குண்டுமழை பொழிந்து வரும் இஸ்ரேல் ராணுவம் திடீரென அண்டை நாடான லெபனான் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் எல்லையை ஒட்டியுள்ள லெபனான் பகுதியில் ஹிஸ்புல்லா இயக்கத்திற்குச் சொந்தமான கண்காணிப்புச் சாவடியை தங்களது போர் விமானங்கள் குண்டுவீசி அழித்ததாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.