இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் இன்று 4வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் பலியானோர் எண்ணிக்க1,600 ஆக அதிகரித்துள்ளது.
இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 900 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 700 பேர் உயிரிழந்தனர்.
காசா முனையில் நேற்று இரவு முழுவதும் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்துள்ளது. 200க்கும் அதிகமான இடங்களில் இஸ்ரேல் விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்ட இடங்கள், ராணுவ டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் நிறுவப்பட்ட இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
https://youtu.be/TF6KVCB8-xQ?si=JQBWzo34yvw-e6-Z