எமது நாட்டு மக்களை இரண்டாம் நிலைக்குக் தள்ளியது யார்?

Share

ஜேர்மனியில் ஊடகவியலாளர் ஒருவருக்குப் பேட்டியளிக்கும் போது ஜனாதிபதி ரணில் அவர்கள் என்றும் இல்லாதவாறு சினத்துடன் நாம் இரண்டாம் மட்டத்திற்குரியவர் அல்லர் என்று கடுப்போடு பதில் அளித்தார் என மட்டக்களப்பு மாவட்ட முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்

சர்வதேச விசாரணைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும், உள்நாட்டுப் பிரச்சினைக்கு உள்ளகப் பொறிமுறையில் மட்டுமே தீர்வு காணப்படும் என்றார். நாட்டின் இறைமையினைக் கையாளும் ஜனாதிபதி என்ற வகையில் அவரது பதில் அமைந்தது.

தர்க்க ரீதியான பதில் அவ்வாறு அமைந்தாலும், யதார்த்த பூர்வமாகப் பார்த்தால் நமது நாடும் மக்களும் இரண்டாம், மூன்றாம் மட்ட நிலையில் உள்ளனதை அறிய முடியும்.

சமூக,பொருளாதார, அரசியல்,அறிவியல், தொழில்நுட்ப,சட்டவாட்சி ரீதியில் நாம் முதலாந்தர நிலையில் இல்லவே இல்லை.

அப்படியென்றால் நாம் இரண்டாம்,மூன்றாம் மட்ட நிலைகளில்தான் உள்ளோம்.சமூக ரீதியில் பார்த்தால் ஒவ்வொரு குடிமகனும் 11 இலட்சம் ரூபாய் கடனாளியாக்கப்பட்டுள்ளான்.

இலங்கையிலுள்ள மேட்டுக்குடியினர் சட்டவிரோதமாக 56 பில்லியன் டொலர்கள் பணத்தினை(5600 கோடி டொலர்கள்) வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளனர்.

கோத்தா ஜனதிபதியாக வந்தபோது இலங்கை திறைசேரியில் 7 பில்லியன் டொலர்கள் இருந்தன.அதனை ஈராண்டுகளில் கோத்தா,அறிவீனமான நிதி முகாமையால் பூச்சிய மட்டத்திற்குக் கொண்டு சென்றார்.

அடுத்த ஆண்டில் நமது நாட்டு மக்களின் வறுமையாளர் வீதம் ஏறத்தாழ 28 வீதமாகப போகிறது. ஆயின் சமூகரீதியாக நமது மக்கள் கீழ் மட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டு அரசியல் இனவாதம் மதவாதம் என்கின்ற அடிப்படை வாதத்தில் 75 ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ளது.

இதனால் எமது ஜனநாயகம், பிற்போக்குவாத சிங்கள இனநாயகமாக மாறியுள்ளது. நீதிமன்றத் தீர்ப்புகள் கூட அரசியல் வாதிகளின் பின்புலத்தால் நடைமுறையாகவில்லை.

பாரிய குற்றங்களைச் செய்த மரண தண்டனைக்குரிய குற்றவாளிகள், ஜனாதிபதிகளின் பொதுமன்னிப்பால் தப்பிப் பிழைக்கிறார்கள்.

பொருளாதார ரீதியில் நமது நாடு வங்குரோத்து நிலையை அடைத்துள்ளது. சீனி,தரமற்ற மருந்து, கண்வில்லைகள், வெள்ளைப்பூடு, எண்ணெய் இறக்குமதிகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ளன. வங்காள தேசிடம் கையேந்தும் நாடாக இலங்கை மாறியுள்ளது.

நாட்டின் வளங்கள் பிற நாடுகளுக்கு விற்கப்பட்டுள்ளன. மக்கள் வாழ்வதற்கு விருப்பமற்ற நாடாக இந்நாடு மாற்றப்பட்டுள்ளது.

புத்திஜீவிகள் நாட்டை விட்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஓராண்டில் 1500 வைத்தியர்கள் வெளியேறியுள்ளனர். இன்னும் 5000 வைத்தியர்கள் வெளியேற உள்ளனர். 850 பேராசிரியர் நாட்டை விட்டு ஓடியுள்ளனர். நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லாததால் நீதிபதி சரவணராஜா தான் நேசித்த தொழிலைத் துறந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்தக் குறிகாட்டிகள் எல்லாம் நமது நாட்டை இரண்டாம் மட்டமல்ல மூன்றாம் மட்டத்திற்கே தள்ளியுள்ளது. இந்த நிலைக்கு நாட்டைத் தள்ளியவர்கள் இந்நாட்டை ஆட்சி செய்த அடிப்படைவாத சிங்களத் தலைவர்களேயாவர்.

நாடு சுதந்திரம் அடைந்த போது ஆசியாவில் மூன்றாம் நிலைப் பொருளதாரத்தை கொண்ட நாட்டை அழித்தவர்கள் யார்? ஆட்சி செய்த மேட்டுக்குடி அடிப்படைவாதத் தலைவர்களேயாவர்.

மொத்தத்தில் நமது நாடு கீழ்மட்ட நிலையில் உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்வதில் வெட்கப்பட வேண்டியதில்லை. நாட்டுத் தலைவர்களின் பொருளாதாரம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலமாகவே உள்ளன. மக்கள் நிலைதான் பரிதாபமாகவுள்ளது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு