இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய தீவிரவாத அமைப்பான ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஏராளமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் பல இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் கடத்திக் கொண்டு தங்கள் ஆக்கிரமிப்பு பகுதியான காசா பகுதிக்குள் சென்று விட்டனர்.
இதனால் அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்துள்ள இஸ்ரேல் ஹமாஸ் ஆக்கிரமிப்பு பகுதிகளில் தாக்குதலை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் போர் நடந்து வரும் இஸ்ரேலில் பிரபல இந்தி நடிகை நுஸ்ரத் பாருச்சா சிக்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியில் பல படங்களில் நடித்துள்ள அவர் இஸ்ரேலில் நடைபெற்ற ஹய்ஃபா சர்வதேச திரைப்பட விழாவிற்கு சென்றுள்ளார்.
கடைசியாக அவரிடம் நேற்று மதியம் 12.30 மணி அளவில் பேசியதாக கூறப்படும் நிலையில், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இச் சம்பவம் பாலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/noWuZ8at4qE