2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Share

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் அவர்களின் பெயரில் ஆண்டுதோறும் கலை மற்றும் அறிவியலில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கொரோனா தடுப்பூசியில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்காவைச் சேர்ந்த கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இயற்பியலுக்கு மூன்று பேர் நோபல் பரிசு பெற்றனர். அதேபோல் வேதியலில் , குவாண்டம் புள்ளிகள் தொடர்பான ஆய்வுக்காக பணிபுரிந்த மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ், அலெக்சி எகிமோவா ஆகிய மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.

இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு நோர்வே நாட்டைச் சேர்ந்த ஜோன் பொஸ்ஸே என்பவருக்கு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படிம் ஈரான் நாடிட்ல் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி, பலமுறை சிறை சென்ற நர்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/qqPwc8vK85Q?si=98DiUjChxPrRChOM

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு