ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் எதிரொலித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி விவகாரம்

Share

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது அமர்வில் விடயம் 8 இன் பொது விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்விவகாரம் பற்றி கருத்து வெளியிட்டிருந்தார்.

இவ்விடயம் தொடர்பில் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் கடந்த வாரம் தமிழ் நீதிபதி டி.சரவணராஜா, உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக தனது அனைத்து உத்தியோகபூர்வ பணிகளையும் இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார்.

சிங்கள பெரும்பான்மையினருக்குள் உள்ள பௌத்த தீவிர போக்குக் கொண்ட மதவாத, இனவாத சக்திகளை எரிச்சலூட்டுவதாக கூறி அவர் பிறப்பித்த உத்தர வை மாற்றுமாறு நாட்டின் சட்டமா அதிபரால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அழுத்தமும் இதில் அடங்கும்.

போர்க்குற்றவாளி என சந்தேகிக்கப்படும் அரச எம்.பி ஒருவர், உயரிய சபையில் அடிக்கடி இலங்கை சிங்கள பௌத்த நாடு என்றும், தமிழ் நீதிபதி தனது இடத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்து, பாராளுமன்றத்தில் மேற்படி நீதிபதியை வெளிப்படையாவே மிரட்டினார்.

அதே நாடாளுமன்ற உறுப்பினர் தேசிய பாதுகாப்பு துறை தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவின் தற்போதைய தலைவராகவும் உள்ளார்.

நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட எனது சக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அரசாங்க ஆதரவு குண்டர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார்.

இது நடைபெற்ற போது பொலிஸார் அங்கு பார்த்துக் கொண்டிருந்தனர். பொலிஸார் நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில், பின்னர் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, இறுதியில் 6 பேரைக் கைது செய்து, அடுத்தடுத்த நாட்களில் நீதிமன்றத்திற்கு சென்று “இனக் கலவரங்களை” தடுப்பதற்கு சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க வேண்டும் என்று காரணம் காட்டி விடுவித்திருந்தனர்.

சரியான சீர்திருத்தங்களை வலியுறுத்தாமல், உடைந்த நீதி நிர்வாக முறைமை கொண்ட இலங்கையைப் போன்று ஒரு நாட்டிற்கு நிதியளிப்பது நிறுவன மயமப்பட்ட அநீதியை நிலைநாட்டுவதாகவே அமையும்” என தெரிவித்தார்.

https://youtu.be/5tjLx2ZglVQ?si=eVjHf3vIHloUnRfi

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு