முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு பைத்தியம்

Share

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் தனது வாகனத்தை விற்றுள்ளார்.அத்துடன் மேற்குலக நாட்டின் இரு தூதுவர்களை சந்தித்துள்ளார்.எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியதன் பின்னர் தனக்கு உயிர் அச்சுறுத்தல் என்று நீதிபதி குறிப்பிடுவது முறையற்றது எனவும் அவர் ஒரு பைத்தியம், அதற்காக சிகிச்சையும் பெறுபவர் எனவும் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு தலைவரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பி.யுமான ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

முல்லைத்தீவு நீதிபதிக்கு நான் அச்சுறுத்தல் விடுத்திருந்தால் என்னை கைது செய்திருக்கலாம்.எனக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கும் அதிகாரம் நீதிபதிக்கு உண்டு. .குருந்தூர் மலைக்கு சென்று நான் அந்த நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் என்னை ”அந்த அரசியல்வாதி”எனக்கூறி குறிப்பிட்டுள்ள கருத்து வெறுக்கத்தக்கது.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதிக்கு நான் அச்சுறுத்தல் விடுத்திருந்தால் என்னை கைது செய்திருக்கலாம்.எனக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கும் அதிகாரம் நீதிபதிக்கு உண்டு.குருந்தூர் மலைக்கு நான் சென்றிருந்த போது அவ்விடத்துக்கு முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி வருகை தந்திருந்தார் .அவ்வேளையின் போது வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரவிகரன் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார்.அவருடன் நன்றாக உரையாடிய நீதிபதியுடன் உரையாட நான் அனுமதி கோரிய போது அதற்கு நீதிபதி அனுமதி வழங்கவில்லை.அதன் பின்னர் நான் அமைதியாக இருந்தேன் .ஏனெனில் நான் சட்டத்தை மதிக்கத்தெரிந்த ஒரு படைவீரன் .

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மரபுரிமைகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன.வடக்கு மற்றும் கிழக்கில் சிங்கள பௌத்தர்களுக்கு வாழ்வதற்கு இடமில்லை.ஆனால் 52 சதவீத தமிழர்கள் தெற்கில் சிங்களவர்களுடன் வாழ்கிறார்கள்.எவ்வித முரண்பாடுகளும் இல்லை .ஆகவே யார் இனவாத நோக்கத்துடன் செயற்படுகிறார்கள் என்பதை சிறந்த தமிழர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

குருந்தூர் மலையில் பௌத்த மரபுரிமைகள் அழிக்கப்பட்டுள்ளன .யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த மரபுரிமைகளில் 479 இற்கும் அதிகமான மரபுரிமைகள் அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் பௌத்தத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளினால் பௌத்த இந்து முரண்பாடுகள் தோற்றம் பெறும் என்று குறிப்பிட்டதை எவ்வாறு நீதிபதிக்கு எதிரான அச்சுறுத்தல் என்று கூற முடியும்.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி கொழும்புக்கு வருகை தந்து அவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 வழக்குகளுக்கு சட்ட ஒத்துழைப்பு பெற்றுக்கொள்வதற்காகவே சட்டமா அதிபரை சந்தித்துள்ளார்.அத்துடன் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் தனது வாகனத்தை விற்றுள்ளார்.அத்துடன் மேற்குலக நாட்டின் இரு தூதுவர்களை சந்தித்துள்ளார்.நாட்டை விட்டு வெளியேறியதன் பின்னர் தனக்கு உயிர் அச்சுறுத்தல் என்று நீதிபதி குறிப்பிடுவது முறையற்றது.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி விகாரகுணம் கொண்டவர். மனைவியையே இம்சைப்படுத்துபவர்.அவர் ஒரு பைத்தியம்.அதற்காக சிகிச்சையும் பெறுபவர். இவற்றை நான் கூறவில்லை அவரின் மனைவியே பொலிஸில் கூறியுள்ளார். எனவே அவர் மன அழுத்தம் காரணமாக பதவி விலகியதாக கூறியுள்ளதை கவனத்தில் எடுக்க வேண்டும் என்றார்.

https://youtu.be/08XKu4c2PUc

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு