முல்லைத்தீவு நீதிபதி டி.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் இன்றைய தினம் முடக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிகோரி நீதிமன்ற பணிபுறக்கணிப்புடன் நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (3) ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டமானது சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெற்றதுடன்,ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிதுறை சுதந்திரத்துக்காய் குரல் கொடுப்போம்,சட்டத்தின் முன் யாவரும் சமம், நீதிதுறையை அச்சுறுத்தாதே,பாரபட்சமற்ற விசாரணை வேண்டும், சுதந்திரத்தில் தலையிடாதே போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை. மாவட்ட நீதிமன்றம், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம், களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றம், மட்டக்களப்பு நீதிமன்றம் மற்றும் 8 நீதிமன்றங்களின் செயற்பாடுகள் செயலிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழப்பாணம் நீதிமன்ற வளாக செயற்பாடுகளும் இன்றைய தினம் முற்றாக முடங்கின.
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தொடர்பிலும், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தி சட்டவாட்சியை நிலைநாட்டவும் ஏதுவாக இன்றும், நாளையும் சட்டத்தரணிகள் வடமாகாண நீதிமன்ற நடவடிக்கைகளை பகிஷ்கரிக்க யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு தீர்மானம் எடுத்துள்ளது.
இதற்கமைய இன்றும், நாளையும் யாழ். நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகள் பணிபுறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளனர்.
https://youtu.be/xjVf6vae_P4