முல்லைத்தீவு நீதிபதி இராஜினாமாவின் பின்புலத்தில் வெளிநாட்டு தூதரகங்களா?

Share

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி டி. சரவணராஜாவின் ராஜினாமாவின் பின்புலத்தை உடனடியாக அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

“நீதிபதி டி. சரவணராஜாவுக்கு வெளிநாட்டு தூதரகங்களுடன் தொடர்பு இருந்துள்ளது எனக் கூறப்படுகின்றது. எனவே, அவர் கூறும் காரணங்களை மட்டும் நம்பாமல், இதன் பின்புலத்தை அரசு கண்டுபிடிக்க வேண்டும்.

முல்லைத்தீவு நீதவான் ஏன் பதவி விலகினார் என்பது பற்றி சரியான காரணங்கள் இன்னும் வெளிவரவில்லை. அவர் கூறும் காரணங்களை மட்டும் ஆராயாமல், இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.

நீதிபதியை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்றிருப்பின் அதனை நாம் கண்டிக்கின்றோம்.” எனவும் குணதாச அமரசேகர குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு