தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காய் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரின் வீதியில் 12 நாட்கள் நீராகாரம் ஏதுமின்றி உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் புதுக்குடியிருப்பு நகரில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினால் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
அதன்படி, தமிழர்கள் வாழும் பகுதிகள் மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் இத்தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் வர்த்தக சங்க தலைவர் நவநீதன் தலைமையில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இடம்பெற்றது.
தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி, மலர் மாலை அணிவித்து, மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி இடம்பெற்றது
மேலும், இதற்காக புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தத்தக்கது.
பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து மாணவர்களால் சக மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி, வடகிழக்கு முன்னேற்ற கழகம் மட்டக்களப்பு வலிந்து காணாம்போன உறுவுகள் சங்கம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.