யாழ் நல்லூரில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதனை குழப்பும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூரில் தியாக தீபம் தலீபனின் நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்த வேளை வீதியில் போக்குவரத்தினைச் சரி செய்தவர்களைப் பொலிஸார் அச்சுறுத்தியதாகவும், மக்கள் நெரிசல் காணப்பட்ட இடத்தில் வேகமாக வாகனத்தை செலுத்தி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர்.