திலீபனின் நினைவுதினத்தை அனுஸ்ரித்து தேராவிலில் இருந்து ஊர்தி!

Share

தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவுதினத்தை அனுஸ்ரிக்க தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து ஊர்தி பவனியொன்று யாழ்ப்பாணம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெறும் தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தாயக அரசியல் துறையினரின் ஒழுங்கமைப்பில் முல்லைத்தீவு, கிளிநொச்சி இளைஞர்களை குறித்த நிகழ்வில் இணைத்துக் கொள்ளும் முகமாக இந்த ஊர்தி பவனி முன்னெடுக்கப்படுகிறது

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சுடர் ஏற்றி, மலர் தூவி, அகவணக்கம் செலுத்தியதை அடுத்து விசுவமடு , தர்மபுரம், பரந்தன், ஆனையிறவு, பளை, சாவகச்சேரி ஊடாக குறித்த ஊர்தி யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியை சென்றடைந்து அங்கு இடம்பெறும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு