முல்லைத்தீவு – மல்லாவியில் அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்திய சம்பவம் ஒன்று நேற்று (22) இடம்பெற்றிருந்தது.
நில அளவை திணைக்களத்தினுடைய குறித்த வாகனம் நேற்று (22) மாலை 6:20 மணியளவில் மல்லாவி பகுதியில் அமைந்திருக்கின்ற மதுபான சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்தில் மதுபானங்கள் பெற்று செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
ஒரு அரச திணைக்களத்திற்குரிய வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி இவ்வாறு மதுபான சாலைக்கு முன்பாக வந்து மதுபானம் எடுத்து செல்கின்ற செயற்பாடுகள் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த விடயம் தொடர்பாக மல்லாவி பொலிஸ் உயர் பொறுப்பதிகாரி அவர்களிடம் சென்று இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெறுகின்றது. குறித்த வாகனத்தையும், சாரதியையும் கைது செய்யுமாறு மக்கள் கோரிய போது அவ்வாறு கைது செய்வதற்கு தங்களால் முடியாது என பொலிசார் மறுத்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த வாகனம் அவ்விடத்தில் நிற்பதனை ஒளிப்பதிவு செய்வதனை கண்டு அவர்கள் உடனடியாக அவ் இடத்தை விட்டு வெளியேறியிருந்தனர்.
பின்னர் சிறிது நேரம் தாமதித்து குறித்த மதுபானசாலைக்கு மீண்டும் வந்து மதுபானங்களை பெற்றுக்கொண்டு சென்றிருந்தமை மக்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளதோடு பொலிஸாரின் குறித்த செயற்பாடு தொடர்பிலும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.