சிவப்பு -மஞ்சள் நிறங்கள் புலிகளைக் குறிக்கின்றது என்றால்;தேசியக் கொடி நிறங்களில் மாற்றம்?

Share

சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் விடுதலைப் புலிகளைக் குறிக்கின்றது என்றால், நாட்டின் தேசியக் கொடியின் நிறங்களை மாற்ற வேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

சிவப்பு மஞ்சள் நிறங்களை பயன்படுத்துவதனால் தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்யபோவதாக கூறி தீலிபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கமாறு தொடர்ந்தும் பல்வேறு தரப்பினர்களினாலும் கோரிக்கை விடுக்கப்படும் நிலையில் இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திலீபன் நினைவேந்தலைக்கு தடைவிதிக்குமாறு யாழ்ப்பாண பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், பொலிஸ் திணைக்களத்தின் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டமா அதிபர் திணைக்கள பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவொன்று, கொழும்பிலிருந்து சென்று யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் அவசர மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வினால் வன்முறைகள் வெடிக்கும் ஆபத்து உள்ளது எனவும் நினைவேந்தலுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்

இந்த நிலையில் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என யாழ் நீதவான் நீதிமன்றம் நேற்று கட்டளை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு