கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் 4 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டதாக மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிர தேசசபையின் முன்னாள் உறுப்பினர் மேகசுந்தரம் வினோரஜ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிலிருந்து தனக்கு தொலைபேசி மூலம் அழைப்பொன்று வந்ததாகவும் அதற்கமைவாக தான் அங்கு சென்றதாகவும் இதன்போது நான் அங்கிருந்த அதிகாரிகளால் 4 மணி நேரமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தன்னைப்பற்றி பொலிஸ்மா அதிபரிடம் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய குற்றத்தடுப்பு பிரிவினரால் தான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன்.
இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனைப் பற்றி தான் முகப் புத்தகத்தில் (பேஸ் புக்) பத்திவேற்றிய விடயங்கள். தொடர்பிலேயே தான் விசாரிக்கப்பட்டதாக மேகசுந்தரம் வினோரஜ் மேலும் தெரிவித்தார்.