அனுரவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிப்பு; சஜித்திற்கு வீழ்ச்சி

Share

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்கவின் பிரபல்யம் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளதாக சுகாதார கொள்கைக்கான நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு மக்கள் மத்தியில் காணப்படும் செல்வாக்கு சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, சஜித் பிரேமதாசவின் மக்கள் பிரபல்யம் மேலும் வீழ்ச்சியடைந்து எதிர்மறை 58 (-58) புள்ளிகளாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நிறுவனம் நடத்திய முந்தைய கணக்கெடுப்பில் இருந்து அனுர திஸாநாயக்கவின் மக்கள் செல்வாக்கு மதிப்பு 16 புள்ளிகள் அதிகரித்து எதிர்மறை 28 (-28) ஆக பதிவாகியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மக்கள் செல்வாக்கு எதிர்மறை 46 (-46) ஆகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மக்கள் எதிர்மறை 78 (-78)ஆகவும் உள்ளது.

பொதுவாக அனைத்து தலைவர்களினதும் மக்கள் செல்வாக்கு எதிர்மறையாக இருக்கின்றது.

எதிர்மறை மதிப்பெண்கள், அதாவது, பூஜ்ஜியத்திற்கும் குறைவான நிகர சாதக மதிப்பீடு, தனிநபர் அல்லது நிறுவனத்தை பிரபலமற்றது என்று அர்த்தப்படுத்துகின்றது.

இந்த ஆய்வினை மேற்கொண்ட சுகாதார கொள்கைக்கான நிறுவகம் என்பது இலங்கையின் கொழும்பில் அமைந்துள்ள ஒரு சுயாதீனமான, பாரபட்சமற்ற ஆராய்ச்சி மையமாகும்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு