தமிழர்களின் மேய்ச்சல் நில பிரச்சினையை தீருங்கள்

Share

காணி அதிகாரம் வழங்குவது குறித்து பேச முன்னர் தமிழ் மக்களுக்கு தேவையான மேய்ச்சல் நிலங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்னதேரர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் (20) நடைபெற்ற காடு பேணல் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருகோணமலை, மட்டக்களப்பு, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் கால்நடை வளர்ப்பு தொடர்பில் பெரும் பிரச்சினைகள் உள்ளன. அரசாங்கம் காணி அதிகாரத்தை வழங்குவது தொடர்பில் பெரிதாக பேசுகின்றது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் விமான நிலையம், கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்காக பண்மையாளர்களின் மாடுகளை மொனராகலைக்கு கொண்டு சென்று விட்டனர்.

வனஜீவராசிகள் காணிகளில் 30 ஆயிரம் வரையிலான மாடுகள் உள்ளன. இதே நிலைமை கிளிநொச்சியிலும் உள்ளது.

அதேபோன்று சட்டவிரோதமாக கால்நடைகள் கொல்லப்படுகின்றன. பண்ணையாளர்களுக்கு மேய்ச்சல் நிலங்களை வழங்குவது தொடர்பான பிரச்சினை இலகுவில் தீர்க்கக் கூடியதே.

இதனை தீர்க்காது காணி அதிகாரம் வழங்குவது தொடர்பில் கதைக்கின்றனர். இதனால் நியாயமான முறையில் தமிழ் மக்களுக்கு தேவையான மேய்ச்சல் காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு