பொதுவாக 50 அல்லது 60 வயது கடந்தவர்களைத்தான் மூட்டு வலி வரும் என்பது தெரிந்ததே. ஆனால் தற்காலத்தில் இளம் வயதினர்களே மூட்டு வலியால் அவஸ்தைப்பட்டு வருகின்றனர்.
வோக்கிங், ரன்னிங், பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்களுக்கும் அதிக அளவில் உடற்பயிற்சி செய்யும் இளைஞர்களுக்கும் மூட்டுவலி பிரச்சினை வருகிறது என்பது சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப நிலையிலேயே சில பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து வந்தால் மூட்டு வலி பிரச்சனை தலை தூக்காமல் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
இஞ்சி மஞ்சள் சேர்த்து இரண்டையும் நீரில் கொதிக்க வைத்து அதை வடிகட்டி தேன் எலுமிச்சம் பழம் சாறு கலந்து பருகினால் இளம் வயதில் மூட்டு வலி வருவதை தவிர்க்கலாம்.
மேலும் பாலுடன் மஞ்சத்தூள் சக்கரை கலந்து இரவில் தொடர்ந்து குடித்து வந்தாலும் மூட்டுவலி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.