மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள மகிளூரில் வீட்டில் இருந்த 15 வயது சிறுமி ஒருவர் நேற்று (15) காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மகிளூர் முதலாம் பிரிவைச் சேர்ந்த ரமேஸ்குமார் கிரிஸ்டிகா என்ற 15 வயது சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
பெற்றோர் கஸ்டப்படுவதாகவும், அதனால் தங்களை பார்க முடியாத நிலையில் இருப்பதாகவும் என்னை பார்கக் கூடிய சிங்கள வீடு ஒன்றுக்கு செல்வதாகவும் கடிதம் ஒன்றை சம்பவதினமான நேற்று எழுதிவைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த 2 வருடங்களாக சிறுமி அப்பம்மாவுடன் வாழ்ந்து வந்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாணையில் தெரியவந்துள்ளது
காணாமல் போன சிறுமி தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.