ராஜீவ் காந்தி கொலை வழக்கு; முருகன், சாந்தன் உள்ளிட்ட நால்வரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை

Share

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்ளிட்ட நால்வரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், உரிய பயண ஆவணங்கள் கிடைத்தவுடன் நால்வரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும், இலங்கையை சேர்ந்த முருகன், தற்போது திருச்சியிலுள்ள அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய கணவரை அகதிகள் முகாமிலிருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கக் கோரி, அவரின் மனைவி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

லண்டனில் வசிக்கும் மகளுடன் சேர்ந்து வாழ தனது கணவர் முருகன் விரும்புவதாகவும், கடவுச்சீட்டு பெறுவது தொடர்பாக அவர் இலங்கை தூதரகத்தைத் தொடர்புகொள்ள வேண்டியிருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், அகதிகள் முகாமில் இருக்கும் அவரால் வெளிவர முடியவில்லை எனவும், ஆகையினால் முருகனை அகதிகள் முகாமிலிருந்து விடுவிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், மத்திய அரசின் அயல்நாட்டினர் பதிவு மண்டல அலுவலக அதிகாரி அருண்சக்திகுமார் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

“மத்திய வெளியுறவுத்துறை விதிகளின்படி, சிறையிலிருந்து விடுதலையாகும் வெளிநாட்டினர்களிடம் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்கள் இருக்கும்பட்சத்தில், அவர்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவர்.

நால்வரின் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை கோரி கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பயண ஆவணங்கள் கிடைத்தவுடன் நால்வரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு