தாதியர்களை விரைவில் சேவையில் இணைத்துக்கொள்ள முடிவு!

Share

தாதியர் கற்கைநெறியை பூர்த்தி செய்த 1000 தாதியர்களை விரைவில் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் கெ​ஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

தாதியர் கற்கைநெறியை நிறைவு செய்த இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இதேவேளை, இணை சுகாதார பட்டதாரிகள் குழுவை சுகாதார அமைச்சின் பதவிகளில் உடனடியாக இணைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தாதியர் பயிற்சிக்காக 3500 மாணவர்களை உள்வாங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக 2019, 2020 ஆம் ஆண்டு உயர் தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் சித்தியடைந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை நாளை மறுதினம் (15) முதல் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும்.

https://youtu.be/BvAyb0oDg8E?si=Kcu21hUGNNtidKad

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு