கல்முனையில் ஆஸாத் மௌலானாவிற்கு எதிராக வழக்குத்தாக்கல்!

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது கருத்துக்களை தெரிவிக்கின்ற பிள்ளையானின் சகா ஆஸாத் மௌலானா போலியான ஆவணங்களை சமர்ப்பித்து தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக பெண் ஒருவர் கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டிற்கமைய செவ்வாய்க்கிழமை (12) கல்முனை நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் குறித்த பெண் தெரிவித்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டு மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி வரை குறித்த வழக்கினை ஒத்தி வைத்தார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரே தனது சகோதரர் சகிதம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் சகா ஆஸாத் மௌலானா மீது முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்.

அதில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து முதல் திருமணத்தை மறைத்து தன்னை மறுமணம் செய்துள்ளதாகவும் பின்னர் மட்டக்களப்பு தனியார் விருந்தினர் விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்று பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி அங்கு சில நாட்கள் தங்க வைத்து குடும்பம் நடாத்தினார் எனவும் பின்னர் தன்னை ஏமாற்றி தலைமைறைவாகி இருப்பதாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சேனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய சாட்சியாக இந்த ஆசாத் மௌலானா தென்பட்டதன் பின்னர் சில தினங்களுக்கு முன்னர் அம்முறைப்பாட்டை மேற்கொண்டிருந்தார்.

அத்துடன் 2019.09.29 திகதி அன்று குறித்த திருமணம் அம்பாறை மாவட்டம் இறக்காமம் எனும் பகுதியில் நடைபெற்றுள்ளதுடன் வரவேற்பு உபசாரங்கள் யாவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முக்கிய விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

எனினும் தற்போது இறக்காமம் பள்ளிவாசல் குறித்த திருமணம் தொடர்பாக மறுத்துள்ளதுடன் போலியாக தமது பள்ளிவாசல் ஆவணம் தயார் செய்யப்பட்டு இம்மோசடி திருமணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு