கொக்குத்தொடுவாய் புதைகுழியில் குவிந்து கிடக்கும் உடலங்கள்!

Share

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று (11) ஐந்தாவது நாளாக இடம்பெற்ற நிலையில் ஐந்தாம் நாள் அகழ்வுப் பணிகள் சற்று முன்னர் நிறைவடைந்தது.

அகழ்வு பணியின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா இன்றையதினம் மூன்று உடற்பாகங்கள் மீட்கப்பட்டதாகவும் ஏற்கனவே மீட்கப்பட்ட இரண்டு உடற்பாகங்களுடன் ஐந்து உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பகுதியில் உடலங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக நெருக்கமாக குவிந்து கிடப்பதனால் சரியாக எத்தனை உடலங்கள் அடையாளப்படுத்த ப்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவல்களை தெரிவிக்க முடியாது உள்ளது என தெரிவித்தார்

இவ்வாறான நிலையில் அகழ்வு பணிகள் தொடர்ந்து நாளைய தினமும் முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு