அரச அதிகாரிகள் மீது முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

Share

நாட்டில் உள்ள மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் உட்பட உள்நாட்டலுவல்கள் அரச அமைச்சின் ஏனைய அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் அதிகாரிகள்குறித்த முறைப்பாடுகளை 1905 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

அந்த தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், இந்த தொலைபேசி வரும் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு