மட்டக்களப்பு கடற்கரையில் இருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (11) அதிகாலை 1.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவாகியுள்ளதோடு இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.