மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.
காவத்தமுனை பனிச்சையடியை சேர்ந்த குறித்த சிறுமி, தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில், தனியார் பஸ் ஒன்றுடன் மோதி விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுமியின் தந்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மது போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
https://youtu.be/8dPabHE_aNo?si=u2MHcf46rcgITaz-