ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தெரிவு செய்யப்பட்ட குழுக்கள் எந்த நோக்கத்தையும் நிறைவேற்றாது எனவும் சர்வதேச விசாரணை நடத்த அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும், எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் சுரேஷ் சாலி ஈடுபட்டுள்ளார் என நான் நம்புகிறேன். அவர் ராஜபக்ஷக்களின் கழிவறைகளை கழுவியவர். 2019 ஆம் ஆண்டு குண்டுத் தாக்குதல்களிலும் ஈடுபட்டார்” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
https://youtu.be/a_oCYjC_lkc