சிறுமியின் கை துண்டித்தமை தொடர்பான விசாரணைகள் தீவிரம்!

Share

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவருக்கு கையின் ஒரு பகுதி சத்திரசிகிச்சை மூலம் துண்டிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் வைத்தியர்கள் தவறிழைத்திருப்பார்களாயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியசாலை பணிக்குழாமினரால் ஏதேனும் தவறுகள் ஏற்படுமாயின் அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

4 நாட்களுக்கு மேலாக நிலவிய காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் – மல்லாகம் – பகுதியைச் சேர்ந்த 7 வயதான சிறுமி ஒருவர் கடந்த மாதம் 24 ஆம் திகதி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

காய்ச்சல் தொடர்ந்தும் நீடித்ததை அடுத்து அவர் கடந்த 25 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த சிறுமிக்கு, உடலுக்கு மருந்துகளை செலுத்தும் கெணுலா பொருத்தப்பட்டு அதனூடாக மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கெணுலா பொருத்தப்பட்ட கை செயலிழந்தமையை அடுத்து கடந்த 2 ஆம் திகதி வைத்தியர்கள் அவரது இடது கையின் மணிக்கட்டுக்கு கீழான பகுதியை சத்திரசிகிச்சை மேற்கொண்டு துண்டித்திருந்திருந்தமையும் குறிப்பிடத்க்கது.

https://youtu.be/IZwjJ-rhH_A?si=lBUigkC4c5HOOivE

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு