உயிர்த்தஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட சஹ்ரான், அல்லாவுக்காகவே தான் குடும்பத்தோடு குண்டுதாக்குதலை மேற்கொள்வதாக தாக்குதலுக்கு முன் வெளியிட்ட காணொளியில் கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தொடர்பில் சனல் 4 வெளியிடவுள்ள ஆவணப்படம் தொடர்பாக நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டபோது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,
அல்லாவுக்காகவே தான் குடும்பத்தோடு குண்டுதாக்குதலை மேற்கொள்வதாக சஹ்ரான் தாக்குதலுக்கு முன் வெளியிட்ட காணொளியில் தெளிவாக கூறியுள்ளார்.
இந்த தாக்குதல் அவரது மத நம்பிக்கைக்காக மேற்கொள்ளப்பட்ட ஒன்று. பௌத்த தலைவரை நாட்டின் தலைவராக்க இந்த தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை.
2017 இல் சில முஸ்லிம் குடும்பங்கள் ஐ எஸ் அமைப்பில் பயிற்சி பெற்றதாக அப்போதைய நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கூறியபோது முஜிபுர் ரஹ்மான் போன்ற முஸ்லிம் தலைவர்கள் அதனை மறுத்தார்கள். விசாரணைகளுக்கு இடையூறாக இருந்தார்கள் அதன் விளைவாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.