சனல்-4 காணொளி தொடர்பில் வாய் திறந்த ரிஷாட் எம்.பி

Share

முஸ்லிம் சமுதாயம் மீது ஒரு சாபக்கேட்டை உருவாக்கிய கூட்டமே உயிர்த்த ஞாயிறு சம்பவத்திற்கு பின்னால் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சனல்-4 முக்கிய காணொளிகளை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில்,செனல் 4 வீடியோ தொடர்பில் நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது ரிஷாட் பதியுதீன் இதனை தெரிவித்துள்ளார்.

ஆட்சி கதிரை ஏற வேண்டும் என்பதற்காக முஸ்லிம் சமுதாயம் மீதும், முஸ்லிம் இளைஞர்கள் மீதும், அரசியல்வாதிகள் மீது திட்டமிடப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அட்ப அரசியலுக்காக இவ்வாறு திட்டமிட்டு சதி செய்தவர்கள் இரண்டு ஆண்டுகள் கூட ஆட்சி புரியவில்லையெனவும், அரசாங்கம் இந்த காணொளி தொடர்பில் தீவிர விசாரணையை ஆரம்பிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு