ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விவகாரம் தொடர்பில் அசாத் மௌலானாவின் வாக்கு மூலத்திற்கு அமைய விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொடர்ச்சியாக இந்த நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் எமது தமிழரசுக் கட்சியும் நானும் தொடர்ந்து வலியுறுத்தும் ஒரு முக்கிய விடயம் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு அதனோடு சம்பந்தப்படவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும்.
சர்வதேச செய்தித் தளமான சனல் 4 வெளியிட்டுள்ள காணொளிக்கு அமைவாக அனைத்து விசாரணைகளும் துரிதப்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும் எனவும் கூறினார்.
https://youtu.be/7Km2MwHqkO0?si=Fr54wnuro2UuHS7-