இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாய் மற்றும் அப்பம்மா ஆகியோரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த டொறின் ரூபகாந்தன் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (04.09) மாலை வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவி
வர்த்தக பிரிவில் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளார்.
https://youtu.be/7Km2MwHqkO0
இம் மாணவி வர்த்தக பிரிவில் பொருளியல் , வணிகம் , கணக்கியல் ஆகிய பாடங்களில் 3 ஏ சித்தியினையும் ஆங்கிலம் பாடத்தில் S பெறுபேற்றையும் பெற்று மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினையும் தேசிய மட்டத்தில் 728 வது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இதேவேளை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் கல்வி கற்ற மாணவன் விஜிதரன் பதிவர்மன் கணித பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.