மாண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Share

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களில் தெரிவுசெய்யப்பட்ட 40 பயனாளிகளுக்கு தலா 45 ஆயிரம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (04) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் (மெசிடோ) முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் வடக்கு ,கொக்குத்தொடுவாய் மத்தி கொக்குத்தொடுவாய் தெற்கு அளம்பில் தெற்கு, அளம்பில்வடக்கு செம்மலை கிழக்கு,கள்ளப்பாடு வடக்கு கள்ளப்பாடு தெற்கு உள்ளிட்ட கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த மாண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களில் தெரிவுசெய்யப்பட்ட 40 பயனாளிகளுக்கே குறித்த தலா 45 ஆயிரம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் கண்காணிப்பு அலுவலர் சூ.செ.ஜான்சன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அருளாணந்தம் உமாமகேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) சி.குணபாலன் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்

குறித்த திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட 172 பயனாளிகளுக்கு குறித்த உதவித் திட்டம் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு