கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கண்டி அஸ்கிரிய மஹா நாயக்க தேரர் மற்றும் மல்வத்து மஹா நாயக்க தேரர் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
குறித்த சந்திப்பானது நேற்று(02) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது இன நல்லிணக்கம் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் தேரர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.