தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ், ரஜினி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் பாலிவுட் பிரபலம் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவி வந்ததையடுத்து சமீபத்தில் விஜய் வர்மாவுடனான காதலை உறுதி செய்தார்.
இந்நிலையில், நடிகை தமன்னா தற்போது அவருக்கு திருமணம் நடைபெறபோவதில்லை என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,
திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்ளத்தான் போகிறேன். ஆனால், இப்போது அதற்கான மனநிலை இல்லை.
என் கேரியர் இப்போது சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. அதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.
விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன். படப்பிடிப்புதான் இப்போது என் மகிழ்வான இடம்” என்றார்.
https://youtu.be/Fmlur2qUDTg?si=Z3XiPhUjXEeS_i9y