திருகோணாமலையில் விகாரை அமைக்கும் விவகாரத்தில் ஆளுநர் செந்தில் தொண்டமான் தான்தோன்றித்தனமாக தீர்மாணங்கள் எடுப்பது இனமுறுகளுக்கு வழிவகுக்கும் என திம்பிரிவெல ரஜமகா விகாரையின் விகாராதிபதி பொல்லேங்கடுவ உபரத்தினநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
இலுப்பை குளம் பொரலுகந்த ரஜமகா விகாரை விடயத்தில் ஆளுநர் மேற்கொண்ட தன்னிச்சையான தீர்மானங்கள் இனங்களுக்கு இடையில் வீண் பிரச்சனைகளை தோற்றுவித்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஆளுநர் செந்தில் தொண்டமான் பதவியை பொறுப்பேற்ற குறுகிய காலப் பகுதிக்குள் திருகோணமலை மாவட்ட மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் விகாரையின் கட்டுமான பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கு ஆளுநர் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
https://youtu.be/Fmlur2qUDTg?si=58XOn3r8Rg0iKzdk