நாடாளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தர் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம்

Share


திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்த தாங்கள் திருகோணமலை அவிருத்தி தொடர்பாக சீனக்குடாவில் ஒரு கலந்துரையாடலை நடத்தியிருப்பதாக நான் அறிகிறேன்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக திருமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் என்னை தெரிவு செய்து வந்துள்ளார்கள் மக்களின் பிரதி நிதியாகி நான் அவர்களின் அபிலாஷைகளை கேட்டறிந்து கொள்ள வேண்டியது அவசியமானது.

எவ்வாறு இருந்தபோதிலும் திருகோணமலையின் அபிவிருத்திக்கு சகல உதவிகளையும் நல்க நான் காத்திருக்கிறேன்.
கடந்த 14 ஆம் திகதி திருகோணமலை பட்டணமும் சூழலும் எல்லைக்குட்பட்ட இலுப்பைக்குள கிராமத்தில் பௌத்த விகாரையொன்று நிறுவப்படுவது தொடர்பில் கடிதம் ஒன்றை தங்களுககு எழுதியிருந்தேன்.

இதுவரை அப்பகுதியில் எந்த அசம்பாவிதமும் இடம்பெவில்லை என அறிகிறபோதும் எதிர்காலத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் சம்பவம் இடம் பெறலாமென கவலை கொள்கிறேன்.

நான் தங்களுக்கு கடந்தவாரம் எழுதிய கடிதத்தில் இலுப்பைக்குளத்தில் வாழும் மக்களில் 99 வீதமானவர்கள் தமிழ் மக்கள் என்றும் அவர்கள் பாரம்பரியமாக அப்பகுதியில் வாழ்ந்துவருவதுடன் மேற்படி கிராமத்தை சுற்றி காணப்படும் கிராமங்களும் தமிழ் கிராமங்களாகுமென சுட்டிக்காட்டியிருந்தேன்.

இலங்கை சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் ஆகிய நிலையில் இலுப்பைக்குளப்பிரதேசத்தில் இந்து மத சின்னங்களோ மற்றும் கிறிஸ்தவ மத சின்னங்களோ அங்கு கண்டு பிடிக்கப்படவில்லை எனவும் பௌத்த அடையாள சின்னங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய சூழ் நிலையில் பிரச்சினை எதுவும் இல்லையாயினும் எதிர் காலத்தில் முறுகல் நிலை தொடருமாக இருந்தால் திருகோணமலை பிராந்தியத்தில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுவது மாத்திரமல்ல, நாட்டின் விரைவான அபிவிருத்திக்கு தடையாக இருக்குமென கவலை அடைகிறேன்.

நான் எந்தவொரு மதத்துக்கும் எதிரானவன் அல்லன். ஆனல் தற்போது காணப்படும் நிலமை தொடருமாக இருந்தால் ஏலவே தங்களால் திட்டமிடப்படடிருக்கும் பொருளாதார முதலீடுகளுக்கு இடைஞ்சல் ஏற்படலாம். இங்கையாயினும் சரி திருகோணமலை ஆயினும் சரி விரைவான அபிவிருத்தி ஏற்படுத்தப்படவேண்டும் என்பதில் நான் உடன்பாடு கொண்டவன்.

திருகோணமலை அபவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலொன்று திருகோணமலை சீனக்குடா விமான படைத்தள ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றதாக நான் அறிகிறேன்,
நான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பத னால் அவர்களின் அபிலாஷைகளுக்கு செவிமடுக்கவேண்டிய அவசியம் உள்ளது. அதே நேரம் தந்களால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளுக்கு சகல உதவிகளைம் மேற்கொள்ள தயாரகவுள்ளேன்.

எவ்வாறு இருந்தபோதிலும் இன்றுள்ள சம்பவங்கள் நிலமையை மோசமடையாச் செய்யாதவகையில் பாதுகாக்கப்படுமாக இருந்தால் மோதலும் வன்முறையும் ஏற்படாமல் தடுக்க முடியும்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு