இலங்கையில் தமிழர்கள் அச்சத்தில்! ஜனா எம்.பி

Share

இலங்கையில் மீண்டும் ஒரு இனக் கலவரம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் உருவெடுத்திருக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய ஒருவர் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதை பூதாகரமாக்கி ஜனாதிபதி தேர்தலில் அவர்வெற்றியும் பெற்றார்.

2024 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாக போகின்றது இதனை மையமாகக் கொண்டு ஒரு சில இனவாதிகள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமாரின் வீட்டுக்கு முன்பாக இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டங்களை செய்திருந்தார்கள் இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஒவ்வொரு தேர்தல்கள் வரும் போதும் இனவாதத்தை தூண்டிவிட்டு அரசியல் செய்வது இந்த நாட்டின் வளமையாகி விட்டது.

வடகிலுக்கு தமிழர்களின் தாயகம் என்றால் கொழும்பில் சிங்களவர்களின் தலைநகரத்தில் தமிழர்களுக்கு என்ன வேலை என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்வில கூறுகின்றார்.

வடகிழக்கில் நீங்கள் வந்து அடாத்தாக குடியேறுகின்றீர்கள் ஆனால் கொழும்பிலும் தெற்கிலும் தமிழர்கள் அடாத்தாக குடியேறவில்லை என்பதை கம்மன்வில போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

https://youtu.be/7ATE-NAxrrA

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு