2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் திங்கட்கிழமை முதல் மீளாய்வு செய்யப்படும் என்றும் ஒக்டோபர் மாதம் பட்ஜெட்டின் முதல் வாசிப்பு இடம்பெற உள்ளதாகவும் தெரியவருகின்றது.
நவம்பர் மாதத்தில் நிதி, பொருளாதார விவகாரங்கள் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வரவு செலவுத் திட்ட உரை நிகழ்த்தப்பட உள்ளது
இந்த நிலையில் அடுத்த ஆண்டு மற்றுமொரு சவாலான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாம்பிட்டிய தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/7ATE-NAxrrA