பண்ணையாளர்களின் நிலையை அறியச்சென்ற பல்சமய தலைவர்களையும் ஊடகவியலாளர்களையும் நோக்கி அடாவடியில் பௌத்த பிக்கு ஈடுபடுகின்றார் எனில் அங்குள்ள பண்ணையாளர்களின் நிலை என்னவாக இருக்கும் என முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு மயிலத்தமடு பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு தொடர்பில் எமது இணையத்தளத்திற்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது…
https://youtu.be/rzUZ4mOorek
பண்ணையாளர்களை சந்தித்து அவர்களது பிரச்சனைகளை கேட்டறிவதற்கு மயிலத்த மடு பிரதேசத்திற்கு ஊடகவியலாளர்கள் சகிதம் சென்று பண்ணையாளர்களை சந்தித்து விட்டு திரும்பிக்கொண்டு இருந்த போது அவர்களது வாகனத்தை வழிமறித்த பௌத்த பிக்கு உற்பட சிங்கள இளைஞர் குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.