பாரம்பரிய தமிழர் பறை இசையுடன் நுங்குத் திருவிழா!

Share

பாரம்பரிய தமிழர் பறை இசையுடன் நுங்குத் திருவிழா நிகழ்வு வவுனியா, மரக்காரம்பளையில் இன்று (21) இடம்பெற்றது.

பனை மரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நோக்குடன் சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் பனம்பொருள் உற்பத்திப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், பண்டாரவன்னியன் புத்தகசாலையின் புத்தக கண்காட்சியும் இடம்பெற்றது. இதில் அதிகளவிலான இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டதுடன், கடும் வெப்பத்தை போக்க நுங்கினையும் குடித்து மகிழ்ந்தனர்.

சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஏற்ப்பாட்டில் தொடர்ச்சியாக நான்காவது வருடமாகவும் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு