வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் இன்று விஜயம் செய்தனர்.
வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் உடைக்கப்பட்ட விக்கிரகங்களை மீளப் பிரதிஷ்டை செய்ய வவுனியா நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், கடந்த 28 ஆம் திகதி ஆலயத்தில் விக்கிரகங்கள் மீளப் பிரதிஷ்டை செய்யப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் இன்று வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தையும், அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் பார்வையிட்டனர்.
சரத் வீரசேகர எம்.பியுடன் சிங்கள மக்களும், நெடுங்கேணிப் பொலிஸாரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.