எமது மக்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மன்னிப்பு கோர வேண்டும் அவ்வாறு இல்லையேல் ஐக்கிய மக்கள் சக்தியுடன் நான் பயணிக்க தயார் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மே தினமான இன்று இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் கூட்டம் பதுளையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தலைமைதாங்கி உரையாற்றுகையில் வடிவில் சுரேஷ் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்.
நாட்டில் தேசிய கொள்கை திட்டம் பற்றி பேசப்பட்டு வருகின்றது அவ்வாறு பேசப்பட்டு வரும் அந்தத் திட்டம் வகுக்கப்படும் பொழுது எமது மக்கள் அதிலே ஓரங்கட்டப்படுகின்றார்கள். இந்நிலைமை இனியும் தொடருமாக இருந்தால் நாம் அதனை அனுமதிக்க முடியாது.
இலங்கை மக்கள் அனுபவிக்கும் அத்தனை உரிமைகளுக்கும் எமது மக்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்பது எம் அனைவரதும் வேண்டுகோளாகும்.
எமது மக்கள் பயங்கரவாதிகள் அல்லர், அவர்கள் எந்த பயங்கரவாத செற்பாடுகளிலும் ஈடுபட்டவர்களும் அல்ல நாடு மேம்பட உழைத்த அவர்களுக்கு ஏன் இந்த புறக்கணிப்பு எனக்கு கட்சியின் சின்னத்தை விட எனது மக்களே முக்கியம்.
எனது மக்களின் நாட் சம்பள தொடர்பாக பேராதனை பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்விலேயே தற்போதைய சூழ்நிலைக்கமைய நாட் சம்பளமாக 3250 வழங்கப்பட வேண்டும் என்று தெரியவந்துள்ளது.
எனவே இந்த தொகையை வழங்குமாறு கம்பெனிக்கு ஜனாதிபதி கட்டளையிட வேண்டும் என்றார்.