அகிம்சை தீபம் அன்னை பூபதி அவர்களின் 35 வது ஆண்டு நினைவு தினம்

Share

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கும், அடாவடித்தனங்களுக்கும் எதிராக தமிழர் தாயகத்தின் விடிவிற்காக சாகும் வரை அகிம்சை ரீதியாக உண்ணா விரதமிருந்து உயிர் நீத்த அகிம்சை தீபம் அன்னை பூபதி அவர்களின் 35 வது நினைவு தினம் இன்றாகும்.

அகிம்சை தீபம் அன்னை பூபதி அவர்களின் 35 வது நினைவு தினமான இன்று 19/4/2023 அடையாள உண்ணாவிரதம்   மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் நடைபெற்றது.

இதில் அன்னாரின் குடும்ப உறவுகள், பொதுமக்கள், சிவில் அமைப்பினர், மதகுருமார்கள் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், ஆலயத்தில்அன்னாரின் ஆத்ம சாந்திக்கான திதி பூசை நடைபெற்றதுடன் அன்னதான நிகழ்வும் நடைபெற்றது.

அத்தோடு மாலை 4 மணிக்கு அன்னாரின் சமாதியில் ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.இந்த ஏற்பாடானது அன்னை பூபதி நினைவுக்கான பொதுக்கட்டமைப்பால் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு