கிழக்கிலங்கையில் புகழ் பூத்த கல்லூரிகளில் ஒன்னறாக திகழும் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் முதல்வராக இருந்து கடமையாற்றிய அருட் சகோதரர் செபமாலை சந்தியாகு அவர்கள் தனது கடமையை செம்மையுற செய்து பாடசாலையில் இருந்து விடை பெற்று சென்றார்.
பாடசாலை பழைய மாணவர் சங்கம் , பாடசாலை அபிவிருத்தி சங்கம், பெற்றோர் சங்கம் , மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாட்டில் பெண்கள் பகுதி தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுத்தலுடன் அதிபர் அருட் சகோதரர் செபமாலை சந்தியாகுவின் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.
தொடர்ந்து பெண்கள் ஆரம்ப பிரிவில் இருந்து அதிபரின் சேவையை நினைவுபடுத்தும் வாசகங்கள் அடங்கிய சுலோகங்களுடன் கனிஸ்ட மாணவ தலைவர்கள் மாலை அணிவித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்தினர்.
பின்னர் மாணவர்கள் ஊர்வலமாக கல்முனை கார்மேல் பாற்றிமா கல்லூரி வீதியால் பாண்ட் வாத்தியம் மற்றும் அணிவகுப்புடன் அதிபரை அதிதிகள் சகிதம் அழைத்து சென்றனர்.
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியானது அம்பாறை மாவட்டத்தில் தனித்துவம் மிக்க ஒரு கல்லூரியாக நூற்றாண்டுகளை கடந்து தன்னிகரற்ற சேவைகளை வழங்கிவரும் ஒரு கல்லூரியாக இக்கார்மேல் பற்றிமா கல்லூரி தடம்பதித்துள்ளது.
இக்கல்லூரியானது கத்தோலிக்க சபைகளின் அருட் சகோதரர்களாலும். அருட் சகோதரிகளாலும் வழிநடத்தப்பட்டு வரும் ஒரு கல்லூரியாகும்.
இக்கல்லூரிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தமக்கு உள்ள சகலவிதமான ஆற்றல்களையும் பிரயோகித்து சிறந்த நிருவாக பண்புகளோடு இக்கல்லூரியை பொறுப்பெடுத்து நடத்திய பெருமைக்குரியவராக அருட் சகோதரர் செபமாலை சந்தியாகு திகழ்ந்தார்.
அவருடைய காலத்தில் கல்லூரியானது பல வளர்ச்சி படிகளை கண்டதுடன் புதுப்பொழிவும் கண்டது.